hello world!
hello world!
Uncategorized

பாலியல் கல்வி? 

This article is for health education purposes only and does not replace professional medical advice, diagnosis, or treatment. If you have a personal health concern, please consult a qualified doctor or healthcare provider.

உடலுறவுக்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்:

முறையான பாலியல் கல்வி இல்லாத இலங்கைப் பிரஜையாகிய நீங்கள், உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் .

பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் (STDs), யோனி (vaginal sex), ஆசனவாய் (anal sex) மற்றும் வாய்வழி (oral sex) உடலுறவு மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகின்றன.

பாலியல் நோய்களின் பொதுவான அறிகுறிகள்:

• உங்கள் பிறப்புறுப்பில் இருந்து அசாதாரணமான முறையில் திரவம் சுரத்தல்.

• சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி ஏற்படுதல்.

• பிறப்புறுப்புப் பகுதியில் அரிப்பு/ கடி ஏற்படுதல்.

• பிறப்புறுப்பைச் சுற்றி கொப்பளங்கள் அல்லது புண்கள் ஏற்படுதல்.

உடலுறவின் போது ஆணுறை (condom) பயன்படுத்துவதன் மூலம் பாலியல் நோய்களிலிருந்து பாதுகாப்பைப் பெறலாம். 

பாலியல் நோய்களுக்கு முறையான சிகிச்சை பெறாவிட்டால், அந்த நோய் உங்களிடமிருந்து உங்கள் பாலியல் துணைக்கு பரவக்கூடும்.

சில பாலியல் நோய்களின் போது உங்களுக்கு எந்தவொரு அறிகுறியும் தென்படாது. உங்களுக்கு நோய் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கான ஒரே வழி பரிசோதனை செய்து கொள்வது மட்டுமே ஆகும்.

எனவே நீங்கள்:

• ஆணுறை (Condom) பயன்படுத்தாமல் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபட்டிருந்தால், அல்லது

• மேலே குறிப்பிடப்பட்ட பாலியல் நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்,

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையின் பாலியல் நோய் கிளினிக் (STD Clinic) இற்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

முறையான சிகிச்சை பெறுவதன் மூலம், பெரும்பாலான பாலியல் ரீதியாக பரவும் நோய்களை முழுமையாகக் குணப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

More to read

MedTalks

© 2026 MedTalks. All rights reserved.
Health simplified your way